சுவையான அரைக்கீரை மாங்காய் பச்சடி

தேவையானவை: பொடியாக நறுக்கிய அரைக்கீரை – ஒரு கப், பொடியாக நறுக்கிய மாங்காய் – அரை கப், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, எள் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3 (அல்லது காரத்துக்கேற்ப), பூண்டுப் பற்கள் – 4, கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2,  எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் எள்ளை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய அரைக்கீரை, பூண்டுப் பற்கள், பச்சை மிளகாய், தோல் சீவி, நறுக்கிய இஞ்சித் துண்டுகள் ஆகியவற்றை சேர்த்து வதக்கி ஆறவைக்கவும். ஆறவைத்த கீரைக் கலவையுடன் மாங்காய்த் துண்டுகள், வறுத்த எள், தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து எடுக்கவும். கடுகு, சீரகம், காய்ந்த மிளகாயை எண்ணெயில் தாளித்து, அரைத்து வைத்த பச்சடியில் கலந்து, சூடான சாதத்தில் சேர்த்து ருசிக்கவும்.

Sharing is caring!