சுவையான, ஆரோக்கியமான பால் கொழுக்கட்டை செய்வது எப்படி!!!

திருச்சி:
சுவையான பால் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டு உங்கள் குழந்தைகளை அசத்துங்க. அருமையான அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவும் கூட.

தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு :  1/4 கிலோ, சர்க்கரை: 1/4 கிலோ, தேங்காய் துருவியது :  1/2 கப், ஏலக்காய்: 3 (பொடியாக்கியது),  உப்பு தேவையான அளவு.

செய்முறை:
பச்சரிசி மாவுடன் உப்பு சேர்த்து கலந்து பின்னர் தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். அதை சிறு சிறு உருண்டைகளாக நீளவாக்கில் உள்ளங்கையில் வைத்து திரட்டிகொள்ளவும்.

அவற்றை இரண்டு சரி பாதியாக பிரித்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் மூன்று தம்ளர் தண்ணீர் வைத்து நன்றாக கொதிக்க விடவும். ஒரு துண்டு கொழுக்கட்டையை போட்டு அது கரைகிறதா என்று பார்த்துக்கொள்ளவும். அது கரையவில்லை எனில் பின்னர் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் கொழுக்கட்டையின் ஒரு பாகத்தை, கொதிக்கும் நீரில் போட்டு ஐந்து நிமிடம் வேகவிடவும். பின்னர் மீதி கொழுக்கட்டையையும் அதனுடன் சேர்த்து ஐந்து நிமிடம் வேகவிடவும்.

வெந்து பதம் வந்தவுடன் அதனுடன் சர்க்கரையை சேர்க்கவும். பின்னர் ஐந்து நிமிடம் கழித்து, கெட்டியாக வந்தவுடன் தேங்காய் துருவலையும், ஏலக்காய் பொடியையும் தூவி இறக்கி வைத்து விடவும். இப்போது சுவையான பால் கொழுக்கட்டை தயார். ஆரோக்கியமான இந்த உணவை குழந்தைகள் சப்புக் கொட்டி சாப்பிடுவார்கள்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!