சுவையான குழாப்புட்டு..! செய்வது எப்படி.?!

தேவையானவை:

பச்சரிசி மாவு – ஒரு கப்
நாட்டுச் சர்க்கரை, தேங்காய் துருவல் – தலா அரை கப்
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
நெய்  – சிறிதளவு
முந்திரி  – சிறிதளவு
உப்பு  – ஒரு சிட்டிகை

செய்முறை :

முதலில் வாணலியில் 2 தேக்கரண்டி நெய் விட்டு பச்சரிசி மாவை வாசம் வரும் வரை வறுத்து, ஆற வைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் அந்த மாவை போட்டு வெதுவெதுப்பான நீர் தௌpத்து, கட்டி இல்லாமல் கலந்து வைத்துக் கொள்ளவும்.

பின் புட்டு வேக வைக்கும் குடுவைப் போன்று உள்ள பாத்திரத்தில், பாதி அளவு தண்ணீர் ஊற்றி அதற்கு மேல் உள்ள பகுதியில், நான்கில் ஒரு பங்கு மாவைப் போட்டு, அதன் மேல் 3 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை போட்டு, தேவையான அளவு வெல்லத்தைத் தூவி விட வேண்டும்.

பிறகு மீண்டும் மாவைப் போட்டு, தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து, பாத்திரத்தை இறுக்கமாக மூடி, 20 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான குழாப்புட்டு தயார்.!

Sharing is caring!