சுவையான சிக்கன் பூண்டு வறுவல் செய்வது எப்படி தெரியுமா?

ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே இருக்கும் பெண்கள் இந்த சிக்கன் பூண்டு வறுவலை சமைத்து அசத்துங்கள் எப்படி செய்வது என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்…

தேவையான பொருட்கள்

சிக்கன் – கால் கிலோ

பூண்டு – 30 கிராம்

வெங்காயம் – 100 கிராம்

எண்ணெய் – 60 மி.லி.கிராம்

மஞ்சள் தூள் – 3 கிராம்

இஞ்சி பூண்டு விழுது – 10 கிராம்

பச்சை மிளகாய் – 2

கொத்தமல்லி, கறிவேப்பிலை – 1 கொத்து

உப்பு – தேவைக்கு

கரம் மசாலா – 5 கிராம்.

செய்முறை:

சிக்கன் நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லி, ப,மிளகாய், பூண்டினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும நறுக்கிய பூண்டினை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

அதன் பிறகு வெங்காயம் சேர்த்து வதங்கியதும் உடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள், பச்சை மிளகாய், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பிறகு இதில் நன்கு கழுவிய சிக்கனை சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.

சிக்கன் வெந்து மசாலாவுடன் இணைந்து வந்த பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கி பரிமாறவும்.

Sharing is caring!