சுவையான பன்னீர் தொக்கு – வீடியோ

பனீர் தொக்கு இட்லி, தோசையுடன் சாப்பிடலாம். மிகவும் சுவையானது சத்தானது. பனீர் புரதச்சத்து நிறைந்தது. உடல் பருமன் குறைக்க விரும்புவோர் இதனை உண்ணலாம். பனீரில் விதவிதமான உணவு வகைகள் செய்ய முடியும். இன்று நாங்கள் பன்னீர் சட்னி எப்படி செய்யலாம் என்பதை வீடியோவில் காட்டியுள்ளோம்.

பனீர் தொக்கு
தேவையான பொருட்கள்
– பனீர் 250g
– வெங்காயம் பெரியது 1
– ? தக்காளி பெரியது 2
– கஜு/கச்சான்
முத்து(வறுக்காதது) 25g
– தேங்காய் பால் தேவையான
அளவு
– எண்ணெய் 2tbs
– பட்டர் / மாஜரீன் 2tbs
– கடுகு 1/2tsp
– பெரும் சீரகம் 1/4tsp
– மஞ்சள் சிறிது
– கறுவா பட்டை சிறிது
– காரம் மசாலா தூள் (ஏலம் சேர்த்தது) 1tbs
– பெரும் சீரகதூள் 1tbs
– மிளகாய் தூள் தேவைக்கு ஏற்ப
– மிளகு தூள் தேவைப்படின்
– கறிவேப்பிலை தேவைக்கு ஏற்ப
– ரம்பை தேவைக்கு ஏற்ப

செய்முறை
– முதலில் பனீரை சிறு துண்டுகளாக்கி உப்பு, சேர்த்து வைக்கவும். (மஞ்சள், மசாலா சேர்க்கலாம்)
– வெங்காயம், தக்காளியை தனித்தனியாக வெட்டி அடித்து விழுதாக்கி வைக்கவும்
– இஞ்சி, பூண்டு விழுதாக்கி வைக்கவும்.
– கச்சான் / கஜுவினை மிக்சியில் அரைத்து பாலாக எடுத்து வைக்கவும்.

– வாணலியில் சிறுது எண்ணெயில் பனீரை சிறிது வறுத்து எடுத்து வைக்கவும்.
– விருப்பம் எனில் வறுத்த பனீரிற்கு தக்காளி sauce சேர்த்து ஊற வைக்கலாம்.
– வாணலியில் எண்ணெய், பட்டர்/மாஜரீன் விட்டு சூடாகியவுடன் கடுகினை பொரிய விடவும். பெரும் சீரகம், கருவாபட்டை சேர்த்து வதக்கி வெங்காய விழுதினை சேர்க்கவும்.
-விழுது நிறம் மாறும் போது உப்பு, கறிவேப்பிலை, ரம்பை இஞ்சி பூண்டு விழுது நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து சேர்த்து பச்சைவாசனை மாறும் வரை வதக்கவும்.
– தக்காளி விழுதை சேர்த்து கிளறவும். கொதிக்கும் போது வெட்டிய மிளகாய், மிளகாய் தூள், மசாலா தூள் சிறிது சேர்த்து கிளறி 11/2 – 2 நிமிடங்கள் விடவும்.
– பின் தேங்காய் பால் அதே அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க 2 நிமிடங்கள் விடவும். (மூடி கொதிக்க விடலாம்)
– பின் கச்சான்/கஜு பாலினை சேர்த்து 30 செக்கன்கள் விடவும்.
– பனீரை சேர்த்து மூடி 2-3 நிமிடங்கள் விடவும்.
– இறக்கும் போது மசாலா தூள், பெரும்சீரக தூள் சேர்த்து இறக்கவும்.

சுவையான சத்தான பனீர் தொக்கு தயார். தோசை இட்லியுடன் சாப்பிடலாம்.

Sharing is caring!