சுவையான மட்டன் நல்லி எலும்பு சூப் செய்வது எப்படி ??

பனிக்காலங்களில் தான் பலருக்கு அதிக நோய் தொற்று வருகின்றது.

இதனை தடுக்க பலர் சூடாக சூப் குடிப்பது வழக்கம்.

அதிலும் மட்டன் நல்லி எலும்பு சூப் குடிப்பது உடலுக்கு பலகை ஊட்டச்சத்துக்களை அள்ளித்தருகின்றது.

அந்தவகையில் தற்போது நல்லி எலும்பு சூப் எப்படி குடிப்பது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

தேவையானவை
 • நல்லி எலும்பு – 250 கிராம்
 • தண்ணீர் – 1லிட்டர்
 • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்உப்பு – 1 1/2 ஸ்பூன்
 • மிளகு – 1/2 ஸ்பூன்
 • பொடியாக நறுக்கிய புதினா – 1 1/2 ஸ்பூன்
 • வெங்காயம் – 1
 • பட்டை – 1
 • சீரகப் பொடி – 1/2 ஸ்பூன்
 • மஞ்சள் – 1/4 ஸ்பூன்
 • தாளிக்க :
 • எண்ணெய் – 1 1/2 ஸ்பூன்
 • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 ஸ்பூன்
 • மிளகு – தேவைக்கு ஏற்ப
 • கொத்தமல்லி – கையளவு
செய்முறை

குக்கரில் நன்கு சுத்தம் செய்யப்பட்ட ஆட்டுக்காலை போடவும். பின் தண்ணீர் ஊற்றவும். அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, மிளகு, புதினா, வெங்காயம்,பட்டை, சீரகப் பொடி, மஞ்சள் சேர்த்து நன்குக் கலக்கவும்.

குக்கரை மூடி அடுப்பில் குறைவான தீயில் 30 நிமிடங்கள் வைக்கவும்.

30 நிமிடங்கள் கழித்து இறக்கியதும் கடாயில் எண்ணெய் விட்டு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

பின் வேக வைத்த மட்டன் தண்ணீரை ஊற்றவும். இறுதியாக மிளகுப் பொடி தூவி கொத்தமல்லி தழையையும் தூவவும்.

வாரம் ஒரு முறையேனும் மட்டன் நல்லி எலும்பு சூப் குடிப்பது உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கும்.

தொற்று, இருமல், சளி, தொண்டை வலி, தொண்டை கட்டுதல், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்னைகளையும் சரிசெய்ய உதவும்.

Sharing is caring!