சுவையான முருங்கை பூ கூட்டு செய்வது எப்படி தெரியுமா ??

தினம் ஒரு சமையலில், இன்று முருங்கைப்பூ கூட்டு வீட்டிலேயே சுவையாக சமைத்து சாப்பிடுவது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

தேவையானவை:

முருங்கைப்பூ : 1 கப்,
சின்ன வெங்காயம் : 10,
பச்சை மிளகாய் : 2,
பாசிப்பருப்பு : கால் கப்,
மஞ்சள் தூள் : 1 சிட்டிகை,
உப்பு : தேவைக்கேற்ப,
சாம்பார்பொடி : முக்கால் டீஸ்பூன்.

தாளிக்க:

எண்ணெய் : 2 டீஸ்பூன்,
நெய் : அரை ஸ்பூன்,
கடுகு : அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு : 1 டீஸ்பூன்,
சீரகம் : கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் : 1,
கறிவேப்பிலை : தேவையான அளவு.

செய்முறை:

முதலில், முருங்கைப்பூவை சுத்தம் செய்து கொள்ளவும்.

வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கை வைத்து கொள்ளவும்.

பச்சை மிளகாயை வகுந்து கொள்ளவும்.

வாணலை அடுப்பில் வைத்து சூடேற்றி நெய்யை விட்டு, அதில் முருங்கைப்பூவைப் போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

பாசிப்பருப்பை மஞ்சள்தூள் ஆகியவை சேர்த்து அரை அவியலாக வேக வைக்க வேண்டும்

பின் அதில் நெய்யில் வதக்கிய முருங்கைப்பூவைப், வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார்பொடி சேர்த்து வேகவிடவும்.

வெந்தவுடன் உப்பு சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிப்பவற்றை போட்டு தாளித்து கூட்டில் சேர்க்கவும்.

சுவையான செட்டிநாடு முருங்கைப்பூ கூட்டு ரெடி!

Sharing is caring!