சுவையான ரவை கேசரி

சிறுவர்கள் மற்றும் பெரியோர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சுவையான ரவை கேசரி செய்வதற்காக முறையை அறிந்து கொள்வோம்…

தேவையான பொருட்கள்

1 கப் ரவை
6 டீஸ்பூன் நெய்
1 கப் சர்க்கரை
2 கப் தண்ணீர்
குங்குமப்பூ சிறிதளவு
5 ஏலக்காய்
¼ கப் நறுக்கப்பட்ட முந்திரி

செய் முறை

கிண்ணத்தில் நெய் ஊற்றி நறுக்கப்பட்ட முந்திரி மற்றும் ஏலக்காயை வறுத்து கொள்ளவும்.

பின்னர் ரவாவை நன்கு நிறம் மாறும் வரை வறுத்து கொள்ளவும்.

பின்னர் பாத்திரம் ஒன்றில் 2 கப் நீர் ஊற்றி கொதிக்க விடவும்.

நீர் கொதித்தவுடன் வறுத்த ரவாவை அதில், போட்டு கிளறவும்.

அதில் ஒரு கப் சர்க்கரையை சேர்க்கவும்.

பின்னர் குங்குமப்பூவை நீரில் ஊறவைத்து அந்த நீரினை கிளறிய ரவை மீது சேர்த்து கொள்ள வேண்டும்.

அதின் மீது நெய் ஊற்றி தொடர்ந்து கிளற வேண்டும்.

பின்னர் வறுத்த முந்திரியை சேர்த்து கொள்ளவும். சுவையான ரவை கேசரி தயார்..

Sharing is caring!