சுவையான வாழைக்காய் கறி செய்வது எப்படி தெரியுமா ??

தேவையான பொருட்கள் :

பெரிய வெங்காயம் – 1
பெரிய வாழைக்காய் – 1
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மீடியம் சைஸ் தக்காளி – 2
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியா தூள்) – ஒன்றரை டீஸ்பூன்
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – ஒரு ஈர்க்கு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

இரண்டாக வாழைக்காயை நறுக்கி, 5 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து ஆற வைத்து கொள்ளவும். பிறகு அதனை தோலுரித்து வட்டமாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடி, பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில், கடாயை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம், நறுக்கிய வெங்காயம் ஆகியவை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி கொள்ளுங்கள்.

வெங்காயம் சற்று வதங்கிய பின்னர், அதில், ஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக பச்சைவாசனை போகும்வரை வதக்கி பின்னர் தக்காளி சேர்த்து சுமார், 2 நிமிடங்கள் வதக்கவும்.

இதில், மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து, பின்னர் வாழைக்காயைச் சேர்த்து மெதுவாகக் கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி சுமார் 5 நிமிடம் வேகவைத்துவிட்டு, அடுப்பை அணைத்து இறக்கிப் பரிமாறுங்கள்.

சூப்பரான வாழைக்காய் கறி தயார்.!

Sharing is caring!