செம டிஷ்… சைடு டிஷ்… வெங்காய மசாலா செய்வது எப்படி!!!

சென்னை:
சாப்பாடு என்றாலே நாக்கு சப்புக் கொட்ட வைக்க வேண்டும். அதிலும் தனி ருசி கொண்டு வர வெங்காய மசாலா உதவுகிறது. அதை எப்படி செய்வது என்று பாருங்கள்.

சாம்பார், குழம்பு போன்றவற்றை எவ்வளவுதான் சுவையாக வைத்தாலும் பொரியல், கூட்டு போன்றவை இல்லாவிட்டால் அது முழுமைபெறாது. அந்த வகையில் சாப்பாட்டிற்கு சுவை கூட்டும் வெங்காய மசாலா செய்யும் முறை குறித்து காணலாம்.

தேவையான பொருட்கள்: வெங்காயம் – 3, உருளைக்கிழங்கு – 1, பட்டாணி – 50 கிராம், தக்காளி – 2, நல்லெண்ணெய், வரமிளகாய் – 10, சீரகம் – 1 ஸ்பூன், கொத்தமல்லி – 1 ஸ்பூன், கடுகு – சிறிதளவு, உப்பு – தே.அளவு, மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்.

செய்முறை:
வெங்காயம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி, சீரகத்தை மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும். பட்டாணியையும், உருளைகிழங்கையும் வேக வைத்து தயாராக  வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும், வெங்காயம், தக்காளி போட்டு வதக்கிய பிறகு அரைத்த மசாலாவையும் போட்டு  ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்ததும் வேக வைத்த பட்டாணி, உருளைக்கிழங்கையும் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கிளற வேண்டும். எண்ணைய் பிரிந்ததும் இறக்கினால் சுவையான வெங்காய மசாலா டிஷ் தயார் .

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!