ட்ரைஃப்ரூட் சப்பாத்தி

ட்ரைஃப்ரூட் சப்பாத்தி

தேவையானவை:

கோதுமை மாவு – கால் கிலோ,
பேரீச்சம்பழம் – 4, பாதாம்,
முந்திரி – தலா 6,
பிஸ்தா, உலர்ந்த திராட்சை – தலா 10 ,
நெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

பேரீச்சம்பழம், முந்திரி, பிஸ்தா, உலர்ந்த திராட்சையை ஊற வைக்கவும். பாதாம் பருப்பை ஊற வைத்து, தோல் உரிக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து, கோதுமை மாவுடன் கலந்து பிசையவும். இதனை சப்பாத்தியாக இட்டு, இருபுறமும் நெய் தடவி, வாட்டி எடுக்கவும்.

குறிப்பு:

இது, புரோட்டீன் சத்து நிறைந்தது. வளரும் குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை கொடுக்கலாம்.

Sharing is caring!