தக்காளி பாதாம் ஊத்தப்பம்

வறுத்த பாதாம் மற்றும் தக்காளி உத்தப்பம் பீட்ஸா செய்வதற்கான முறையை அறிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட 1 கப் அரிசி
2 கப் தண்ணீர்
10 கிராம் வெட்டிய தக்காளி
1 துண்டு நறுக்கப்பட்ட இஞ்சி
1 தேக்கரண்டி திருவிய சீஸ்
தேவையான அளவு உப்பு
ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட 1/2 கப் உழுந்து
15 கிராம் பாதாம்
10 கிராம் வெங்காயம்
1 தேக்கரண்டி பீட்ஸா சாஸ்
10 மில்லிலீற்றர் எண்ணெய்

செய்முறை

ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்கப்பட்ட அரிசி மற்றும உழுந்தை மிக்ஸியில் போட்டு நீர் சேர்த்து அறைத்து கொள்ள வேண்டும். நன்கு அறைத்த பின்னர் அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.

பின்னர் கிண்ணம் ஒன்றில் எண்ணெய் சூடாக்கி கொள்ள வேண்டும். எண்ணெய் சூடாகியவுடன், அறைத்து வைத்த மாவினை ஊத்தம் போன்று உற்றி கொள்ள வேண்டும்.

அதன் மீது நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி மற்றும் கொத்தமல்லி இலை தூவ வேண்டும்.

அதனை மறு பக்கம் திருப்பி போட்டு வேக வைக்க வேண்டும். சிறிது நேரத்தின் பின்னர் அதனை மீண்டும் திருப்பி போட வேண்டும். அதின் மீது பீஸ் சோஸ் பூசி வட்டமாக வெட்டிய பாதாம் பருப்புகளை தூ வேண்டும்.

சிறிது நேரத்தில் அடுப்பில் இருந்து அதனை இறக்கி கொள்ள வேண்டும். தற்போது வறுத்த பாதாம் மற்றும் தக்காளி உத்தப்பம் பீட்ஸா தயார். அதனை வெட்டி உடனடியாக பரமாறலாம்.

Sharing is caring!