தேங்காய் அவல்

தேங்காய் அவல்

தேவையானவை:

கெட்டி அவல் – கால் கிலோ,
தேங்காய் துருவல் – 1 கப், பொடித்த
வெல்லம் – 1 கப்,
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
நெய் – 1 ஸ்பூன்.

செய்முறை:

அவலை வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்து, ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். அதனுடன் தேங்காய் துருவல், பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து நன்றாகக் கலந்து கொடுக்கவும்.

குறிப்பு:

காலை, மாலை நேர டிபனாக இதைக் கொடுத்தால் நீண்ட நேரம் பசி தாங்கும். வெறும் அவலில் தண்ணீர் அல்லது பால் விட்டுப் பிசறி, வெல்லம், தேங்காய் சேர்த்தும் கொடுக்கலாம்.

Sharing is caring!