தேங்காய் பால் இரசம்

2 பேருக்கு போதுமானது 

தேவையான பொருட்கள் :

  1. தேங்காய் பால் – 2 தம்ளர் ( பாதித் தேங்காய் )
  2. தேசிப் பழம் – 1
  3. கடுகு – 1 சிட்டிகை
  4. நற்சீரக போடி – 1 மே. க ( நிரப்பி )
  5. மிளகு தூள் – 1 தே. க ( மட்டமாக  )
  6. சிறிதாக வெட்டிய வெங்காயம் – 1 மே. க ( நிரப்பி )
  7. நல்லெண்ணெய் – 2 மே. க
  8. உப்பு – அளவிற்கு

செய்முறை : 

  • தாய்ச்சியில் நல்லெண்ணெய் விட்டு கொதித்தபின்பு கடுகை போட்டு வெடிக்க வைத்து வெங்காயத்தை இட்டு வதங்கவிடவும் .
  • வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு சீரகப்பொடி , முலகு தூள் , உப்பு தூள் என்பவற்றை கலந்து பாலையும் விட்டு நன்றாக கலக்கிப் பொங்கி கொதிக்கும்வரை இடைவிடாது துலாவி காய்ச்சி கொதித்ததும் இறக்கி ஓரளவான சூட்டுடன் தேசிப்புளி சேர்த்து கலந்து பரிமாறலாம் .

Sharing is caring!