நினைத்தாலே சுவைக்க தூண்டும் பனீர் பாயாசம் செய்து அசத்துங்கள்!!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாயாசம் என்றால் நாக்கை சப்புக் கொட்டுவார்கள். அதிலும் ருசியான பனீர் பாயாசம் செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பன்னீர் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்: பால் – அரை லிட்டர், பாதாம் – 5, முந்திரி பருப்பு – 5, உலர் திராட்சை – 10,
பனீர் – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், சர்க்கரை – தேவைக்கு, குங்குமப்பூ – சிறிதளவு, கண்டென்ஸ்டு மில்க் – கால் கப்,
நெய் – சிறிதளவு.

செய்முறை: பனீரை துருவிக்கொள்ளவும். முந்திரி பருப்பு, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் பாதாம், முந்திரி பருப்பு, உலர் திராட்சை போன்றவற்றை வறுத்துக்கொள்ளவும். சிறிதளவு பாலில் குங்குமப்பூவை ஊற வைத்துக்கொள்ளவும்.

அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்கவிடவும். கொதிக்க தொடங்கியதும் ஓரளவு கெட்டி பதத்துக்கு வரும் வரை மீண்டும் கொதிக்க வைத்துக் கொள்ளவும். பால் கெட்டியானதும் கண்டென்ஸ்டு மில்க், பனீரை சேர்த்து கிளறி கொதிக்கவிடவும்.

கொதிக்க தொடங்கியதும் ஏலக்காய் தூள், சர்க்கரை, குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும். இறுதியாக வறுத்த முந்திரி பருப்பு, பாதாம் சேர்த்து இறக்கவும். நினைத்தாலே ருசிக்கும் சுவையில் பனீர் பாயாசம் தயார்.

Sharing is caring!