நெத்தலி கருவாடு பொரிக்கும் முறை இதோ!

நெத்திலி கருவாடு என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இல்லை. அனைத்து வகையான உணவுக்கும் பொருத்தமாக இருக்கும். அதன் மொறு மொறு சுவை எவ்வளவு சாப்பிட்டாலும் திருப்தியாகாது. அந்த அளவிற்கு சுவை மிகுந்த நெத்திலி கருவாடை எப்படி பக்குவமாக மொறு மொறுவென வறுப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

நெத்திலி கருவாடு – கையளவு

மிளகாய் தூள் – 1 tsp

மஞ்சள் தூள் – 1/2 tsp

உப்பு – தே.அஎண்ணெய் – வறுக்க தே.அ

செய்முறை:

கருவாட்டின் தலையை நீக்கி சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

பின் சுடுதண்ணீர் வேக வைத்து அந்த தண்ணீரில் கருவாடை மூழ்க வைத்து ஊற வையுங்கள். 2 நிமிடங்கள் ஊற வேண்டும்.

2 நிமிடங்கள் கழித்து அதில் இருக்கும் மண், தேவையற்ற உறுப்புகளை நீக்கிவிடுங்கள். தோலையும் விரலால் சுரண்டி நீக்கிக்கொள்ளுங்கள்.

பின் 2 முறை அலசுங்கள். இதனால் மண் இல்லாமல் சுத்தமாக இருக்கும். சுத்தம் செய்ததும் தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக பாத்திரத்தில் குழம்பு மிளகாய் தூள், மஞ்சள், உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்தில் கலந்துகொள்ளுங்கள்.

Sharing is caring!