பன்னீர் 65

தேவையானவை: பனீர் துண்டுகள் – 15 அல்லது 20, இஞ்சி –  பூண்டு விழுது, எலுமிச்சைச் சாறு, சில்லி சாஸ் – தலா ஒரு டீஸ்பூன், மைதா – கால் கப், சோள மாவு – 4 டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு,  உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் பனீர் துண்டுகள், இஞ்சி – பூண்டு விழுது எலுமிச்சைச் சாறு, சில்லி சாஸ், உப்பு சேர்த்துக் கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். மைதா, சோள மாவு, உப்பை சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். ஊற வைத்த பனீர் துண்டுகளை மைதா கலவையில் புரட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் பனீர் துண்டுகளைப் போட்டு வெந்ததும் திருப்பிவிட்டு, பொன்னிறம் ஆனதும் எடுத்து எண்ணெயை வடிக்கவும். பனீர் துண்டுகளை தட்டில் வைத்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

குறிப்பு: தக்காளி சாஸ், சட்னி இதற்கு ஏற்ற சைட் டிஷ்.

Sharing is caring!