பருப்பு ரசம்

பருப்பு ரசம்

தேவையானவை:

துவரம்பருப்பு – ஒரு கப்,
பூண்டு – 4 பல்,
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு,
சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன்,
சீரகம், கடுகு – தலா கால் டீஸ்பூன்,
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்),
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

துவரம்பருப்பை குழைய வேக விடவும். பூண்டைத் தோல் உரித்து நன்கு நசுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பூண்டு தாளித்து, புளியைக் கரைத்து அதில் விடவும். பொடியாக நறுக்கிய தக்காளி, சாம்பார் பொடி, உப்பு சேர்க்கவும். வேக வைத்த பருப்பை தண்ணீர் விட்டுக் கரைத்துச் சேர்க்கவும். நன்கு கொதித்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி, பெருங்காயத்தூள் போட்டு இறக்கவும்.

குறிப்பு:

சூடான சாதத்தில் நெய் விட்டு, இந்த ரசத்தைச் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூண்டு, வாயுத் தொல்லை வராமல் தடுக்கும்.

Sharing is caring!