பாசிப்பருப்பு பொங்கல்

பாசிப்பருப்பு பொங்கல்

தேவையானவை:

அரிசி, பாசிப்பருப்பு – தலா 200 கிராம்,
முந்திரிப்பருப்பு – 10,
இஞ்சி – சிறு துண்டு, மிளகுத்தூள் (ஒன்றிரண்டாக உடைத்தது),
சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்,
நெய் – 100 மி.லி,
கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். அரிசியையும் பாசிப்பருப்பையும் ஒரு பங்குக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு குழைவாக வேக விடவும். இஞ்சியை தோல் சீவி, பொடியாக நறுக்கவும்.

சிறிது நெய்யில் இஞ்சி, மிளகுத்தூள், சீரகம், முந்திரியைப் போட்டு வறுக்கவும். கறிவேப்பிலையை சிறிது நெய்யில் தனியாகப் பொரிக்க வும். இரண்டையும் பொங்கலில் சேர்த்து, உப்பு போட்டுக் கலக்கவும். மீதமுள்ள நெய்யைப் பொங்கலுடன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு:

பாசிப்பருப்பு வயிற்றுப் புண் வராமல் தடுக்கும். மிதமான காரம் கொண்ட சட்னி, இந்தப் பொங்கலுக்கு சிறந்த காம்பினேஷன்.

Sharing is caring!