பாசி பருப்பு புட்டு… குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உறுதுணை

திருச்சி:
பாசிபருப்பில் புட்டு செய்து கொடுத்து குழந்தைகளின் ஆரோக்கியத்தை உயர்த்துங்கள்.

தேவையானப் பொருட்கள் :

பாசிபருப்பு– 1 கப், வெல்லம் –  முக்கால் கப், தேங்காய்– தேவையான அளவு, நெய்– சிறிதளவு, ஏலக்காய்– சிறிதளவு, முந்திரி–சிறிதளவு,
திராட்சை–சிறிதளவு, உப்பு– சிறிதளவு.

செய்முறை
முதலில் பாசிபருப்பை நன்கு கழுவவும். பின்பு பாசிபருப்பை தண்ணீர் 2 மணி நேரம் ஊற்றி ஊறவைக்கவும். ஊறிய பின்னர் தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் போட்டு கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

பின்னர் அந்த அரைத்த பாசிபருப்பில் சிறிதளவு உப்பு போட்டு எடுத்து இட்லி பாத்திரத்தில் புட்டு மாவை தூவுவது போல தூவி வேக வைக்கவும். சிறிது நேரத்தில் வெந்து விடும். வெந்த பின் பாசிபருப்பை எடுத்து உதிர்க்கவும். உதிர்த்தப்  பாசிபருப்பை ஆற வைக்கவும். தேங்காயை துருவி வைத்து கொள்ளவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி
முந்திரி மற்றும் திராட்சையைத் தனி தனியாக வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்னர் வேக வைத்து ஆரிய பாசிபருப்பை அதே கடாயில் போட்டு வதக்கவும். அத்துடன் வெல்லம் சேர்த்து வதக்கவும். பின்னர் துருவிய தேங்காயை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

வதக்கிய பின்னர் ஏலக்காய் தூவி வருத்த முந்திரி திராட்சை போட்டு இறக்கினால்  சுவையான பாசிபருப்பு புட்டு தயார். குழந்தைகளுக்கு இது மிகவும் ஆரோக்கியமான உணவாகும்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!