பார்லி பாத்

பார்லி பாத்

தேவையானவை:

பார்லி – 200 கிராம்,
வறுத்த வேர்க்கடலை – ஒரு கப்,
பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன்,
நறுக்கிய குடமிளகாய், பெரிய வெங்காயம் – தலா 1,
நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,
இஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்),
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்,
நெய் – டேபிள்ஸ்பூன்,
துருவிய கேரட் – ஒரு கப்.
கடுகு, உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சம்பழம் – 1,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

பார்லியை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டவும். கடாயில் நெய் விட்டு நறுக்கிய குடமிளகாய், வெங்காயம், இஞ்சியை போட்டு நன்கு வதக்கவும்,

நெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அதில் பார்லியைப் போட்டுக் உப்பு சேர்க்கவும். வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை, மிளகுத்தூள் போட்டு கிளறி, துருவிய கேரட்டையும் சேர்த்துக் கிளறி இறக்கவும். எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து சேர்க்கவும். நறுக்கிய கொத்துமல்லி தூவி, நன்றாகக் கலந்து கொடுக்கவும்.

குறிப்பு: பார்லி சிறுநீரகப் பிரச்னை வராமல் தடுக்கும்; நீர் சம்பந்தமான நோய்களை விலக்கும்.

Sharing is caring!