பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட்டில் சுவையான சட்னி செய்யும் முறை!!!

கேரட்டில் சுவையான சட்னி செய்வது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கேரட்டில் இருக்கும் பீட்டா கரோட்டின் நமது உடலில் உள்ள செல்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கும். பீட்டா கரோட்டினில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வை மங்கலாகாமல் பார்த்து கொள்கிறது.

அத்துடன் இதில் இருக்கும் பால்காரினால், பால்காரின்டியோல் ஆகியவை புற்று நோய் வராமல் பாதுகாக்கும். கேரட் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதய வால்வுகளில் கொழுப்பு அடைக்காமல் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை மிகவும் குறைகிறது. சுவையான கேரட் சட்னி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

தேவையானவை: கேரட் – 2, வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 5, பூண்டு – 2 பல், புளி – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், நறுக்கிய வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், புளி, பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் வதக்கியவற்றை மிக்சி ஜாரில் போட்டு உப்பு சேர்த்து, கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சட்னியுடன் சேர்த்தால் சுவையான கேரட் சட்னி தயார்!

தோசை, இட்லிக்கு கேரட் சட்னி அருமையான சைட்டீஷ் ஆக இருக்கும். இது பார்க்க கலர்ஃபுல்லாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Sharing is caring!