புதினா துவையல் செய்வது எப்படி?

புதினா ஒரு மருத்துவ மூலிகையாகும். இதில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன.

சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சம் ஆகும்.

அந்தவகையில் தற்போது புதினாவை கொண்டு எப்படி ஆரோக்கிய முறையில் துவையல் செய்வது என இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • புதினா இலைகள் – 1 கோப்பை
  • உளுத்தம் பருப்பு – 2 மேஜை கரண்டி
  • சிவப்பு மிளகாய் – 10
  • புளி – ஒரு சிறிய உருண்டை அளவு
  • வெல்லம் – 1 தேகரண்டி
  • தேங்காய் – 2 மேஜை கரண்டி
  • உப்பு – 1/2 அல்லது 1 தேக்கரண்டி
செய்முறை

அடுப்பில் தீ மூட்டி, அதில் ஒரு கடாய் வைத்து உளுத்தம் பருப்புகளையும், சிவப்பு மிளகாய்களையும் பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும்.

பின்பு அதில் புளியையும், நீரில் கழுவி சுத்தம் செய்யப்பட்ட புதினா இலைகளையும் ஒன்றாக போட்டு 1 நிமிடம் நேரம் புதினா இலைகள் வதங்கும் வரை மிதமான வெப்பத்தில் வதக்க வேண்டும்.

பின்பு அடுப்பிலிருந்து புதினா வதக்கலை இறக்கி அதை ஆற விட்டு தேங்காய் வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது நீர் விட்டு மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து எடுக்க புதினா துவையல் தயார்.

இந்த முறையில் புதினா தொகையலை செய்யும் போது, இதில் மிளகாய், புளி மற்றும் உப்பு ஆகிய மூன்றையும் சரியான விதத்தில் சேர்க்கும் போது துவையல் நன்றாக இருக்கும்.

தேங்காய் மற்றும் வெல்லத்தை சேர்ப்பதால் புதினா துவையல் சுவையாக இருக்கும்.

Sharing is caring!