பூசணிக்காய் ரசவாங்கி

தேவையானவை: பூசணிக்காய் துண்டுகள் – ஒரு கப், புளி – சிறிய எலுமிச்சம்பழம் அளவு, மிளகாய் வற்றல் – 3 அல்லது 4, கடலைப் பருப்பு, தனியா, தேங்காய் துருவல் – தலா 2 டீஸ்பூன், பெருங் காயத்தூள் – கால் டீஸ்பூன், வேக வைத்த மொச்சைக் கடலை – கால் கப், வேகவைத்த துவரம்பருப்பு – கால் கப்,  எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புளியை உப்பு சேர்த்துக் கரைத்து வடிகட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் மிளகாய் வற்றல், தனியா, கடலைப்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து, அரைத்துக் கொள்ளவும். கடாயில் புளிக் கரைசல், அரைத்த விழுது, பூசணிக்காய் துண்டுகள் சேர்த்து கொதிக்கவிடவும். பூசணிக்காய் வெந்ததும் வேக வைத்த மொச்சைக் கடலை, துவரம்பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு சேர்ந்தாற் போல வந்ததும், கீழே இறக்கவும்.  கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலையை தாளித்து இதில் சேர்த்துக் கலக்கினால்… பூசணிக்காய் ரசவாங்கி தயார்.

Sharing is caring!