பூசணிப் பொரியல்!

பூசணிக்காய் .. பொங்கலன்று கண்டிப்பாக இடம்பெற வேண்டிய  முக்கியமான காய்கறிகளில் ஒன்று. மார்கழி மாதம் முதலே என்னை கவனி கவனி என்று கண்களைக் கவரும் பூசணியைப் பொரியலாக்கி படைப்போம்.  பூப்போன்ற சுனை இருப்பதால் இந்தக் காயை பூஞ்சுனைக்காய் என்று அழைத்தனர். இவையே நாளடைவில் பூசணிக்காயாக மருவிவிட்டது. இது இனிப்பு தன்மையைக் கொண்டவை. கிராமப்புறங்களில் வீட்டின் புழக்கடை பகுதியில் பூசணியை விதைத்திருப்பர். பொங்கல் பண்டிகையின் கொண்டாட்டத்தில் பூசணியின் வரவும் சேரும். காரம் சேர்த்த பூசணி பொறியலை, சர்க்கரைப் பொங்கலுடன் பூசணி இலையில் வைத்து சாப்பிடும்.. சுவை இருக்கிறதே.. காரமும்… இனிப்பும் சேர்ந்த கலவையும் அருமையாக இருக்கும் என்று உணரும் தருணம் இதுதான்…பூசணி பொரியலை எப்படிச் செய்வது பார்க்கலாமா? மிக மிக எளிமையாக செய்யக்கூடிய பொரியல் இது.

தேவையான பொருள்கள்:

பூசணி – அரைக்கிலோ

சாம்பார்  வெங்காயம் – 1 கப்

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 4 டீஸ்பூன் (காரம் கூட இருப்பது நல்லது

 

Sharing is caring!