மசாலா வேர்க்கடலை

தேவையானவை: வேர்க்கடலை – ஒரு கப், மிளகாய்த்தூள்- கால் டீஸ்பூன், எண்ணெய் – டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, கடலை மாவு – 2 டீஸ்பூன், அரிசி மாவு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலையை போட்டு, ஒரு கை தண்ணீர் தெளித்துப் பிசிறி வடிகட்டவும். உப்பு, எண்ணெய், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து பிசிறினாற் போல கலக்கவும். கலவையை பேப்பர் தட்டில் பரவலாக வைத்து ‘மைக்ரோவேவ் அவன்’ உள்ளே 2 நிமிடம் வைத்து எடுத்து, கலந்து ஆறவிட்டால்… மசாலா வேர்க்கடலை தயார்!

குறிப்பு: ‘மைக்ரோவேவ் அவன்’ இல்லாதவர்கள் வேர்க்கடலை கலவையை, எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.

Sharing is caring!