மட்டன் குழம்பு செய்வது எப்படி?

இந்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையும் தொடர்ந்து புத்தாண்டு வருவதை யொட்டி பலரும் சுவையான உணவு தயாரிக்க திட்டமிடுவர். அவர்களுக்கு தற்போது செட்டிநாடு மட்டன் குழம்பு செய்யும் முறை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • மட்டன் – 1/2 கிலோ
  • சின்ன வெங்காயம் – 20
  • தக்காளி – 2
  • பூண்டு – 10 பல்
  • இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  • தேங்காய் துருவியது – 3 மேசைக்கரண்டி
  • கசகசா – 1 தேக்கரண்டி
  • மசாலா தூள் – 2 மேசைக்கரண்டி
  • மல்லித்தூள் – 1 மேசைக்கரண்டி
  • மசாலாதூள் தயார் செய்வது
  • தனியா – 2 மேசைக்கரண்டி
  • வரமிளகாய் – 8
  • சோம்பு – 1 தேக்கரண்டி
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • பட்டை – சிறு துண்டு
  • ஏலக்காய் – 2
  • கிராம்பு – 2

இவற்றை எண்ணெய் ஊற்றாமல் வதக்கி, பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

தேங்காய் விழுது

  • தேங்காய், கசகசா, ஒரு தேக்கரண்டி சோம்பு சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

தாளிக்க

  • பட்டை – சிறிது
  • ஏலக்காய் – 2
  • கிராம்பு – 2
  • பிரியாணி இலை – சிறிது
  • கருவேப்பிலை – சிறிது
  • சோம்பு – 1 தேக்கரண்டி

செய்முறை

  • மட்டனை கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  • வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  • குக்கரில் இரண்டு மேசைக்கரண்டி அளவு எண்ணை ஊற்றி அதில் தாளின்ன கொடுத்துள்ள பொருட்களை சேர்ந்து வதக்கவும்.
  • நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.
  • பின்னர் மட்டன், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து சிறுது நேரம் வதக்கவும்.
  • இதனுடன் மூன்று கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைத்து மிதமான சூட்டில் வேகவிடவும்.
  • ஒரு விசில் வந்த பிறகு சூட்டை குறைத்து மேலும் 12 நிமிடம் வேக விடவும்.
  • குக்கர் ஆவி அடங்கிய பின்பு, அரைத்து வெத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து மேலும் 5நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
  • சுவையான செட்டிநாடு மட்டன் குழம்பு ரெடி

Sharing is caring!