மரவள்ளி கிழங்கில் வடை

சத்தான மரவள்ளி கிழங்கு வடை செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடும் சுவையான சத்தான மரவள்ளி கிழங்கு வடை செய்து உங்கள் குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்: மரவள்ளி கிழங்கு துருவல் – ஒரு கப், புழுங்கல் அரிசி – 2 கப், மிளகு தூள்- 1 டீஸ்பூன், எண்ணெய்- தேவைக்கேற்ப, உப்பு – தேவைக்கேற்ப, துவரம் பருப்பு – 1/4 கப், பெருங்காயம் – 1 சிட்டிகை, காய்ந்த மிளகாய் – 4, கறிவேப்பிலை, மல்லித்தழை – தேவைக்கேற்ப.

செய்முறை: ஒரு பவுலில் துவரம் பருப்பு, புழுங்கல் அரிசி, காய்ந்த மிளகாய் இம்மூன்றையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். பின் கொரகொரப்பாக சற்று கெட்டியாக அரைத்து கொள்ளுங்கள்.

பின் அதோடு சீவிய மரவள்ளிக்கிழங்கை, உப்பு, பெருங்காயம், மிளகுத் தூள், கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து பிசையவும். கடாயில் எண்ணெயை ஊற்றி காய்ந்த பின், பிசைந்த மாவை வடைகளாக தட்டி போட்டு நன்கு வெந்ததும் எடுத்து பரிமாறவும். சுவையான சத்தான மரவள்ளிக்கிழங்கு வடை தயார்.

Sharing is caring!