மாசி கருவாடு சம்பல் செய்வது எப்படி?

கடல் உணவுகளில் இலங்கையில் கருவாடுக்கு என்றே தனி மசுவு உள்ளது. இதன் ருசி பிடிக்காதவர் எவரும் இருக்க முடியாது.

அதிலும் இதனை கொண்டு தயாரிக்கப்படும் மாசி சம்பல் இலங்கையில் பல இடங்களில் விரும்பி உண்ணப்படுகின்து.

பாண், ரொட்டி, பிட்டு போன்ற உணவுகளில் சுவையை கூட்டுவதாக இந்த சம்பலை மிகவும் வித்தியசமாக தயாரிக்கப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது இந்த சம்பலை எப்படி தயாரிப்பது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • மாசி கருவாடு – 1/4 கிலோ
  • சாம்பார் வெங்காயம் – 200 கிராம்
  • பச்சைமிளகாய் – 4
  • எலுமிச்சம் பழம் – 1
  • உப்பு – தேவையான அளவு
செய்முறை

கருவாட்டை மண் போக நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். தலை, வால் பகுதிகளை நீக்கி எடுத்து விடவும்.

பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை இடித்து கொள்ளவும்.

வாணலியில் இவற்றை நன்கு வறுத்து, உப்பு, எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும்.

பிறகு கருவாட்டைச் சேர்த்து நன்கு வறுக்கவும்.

வறுத்தபின் இறக்கி சூடு ஆறியதும் இவற்றை பொடி செய்தால் மாசி கருவாடு சம்பல் ரெடி.

சாதத்துடன் சேர்த்து சாப்பிட `கருவாடு சம்பல்’ சுவையாக இருக்கும்.

2 நாட்கள் பிரிஜ்ஜில் வைத்திருந்து சாப்பிட்டாலும் கெட்டுப்போகாது.

 

Sharing is caring!