மாம்பழம்- ஓட்ஸ் ஸ்மூத்தி செய்முறை!

சுவையான மாம்பழம்- ஓட்ஸ் ஸ்மூத்தி சில நிமிடங்களில் தயாராகி விடும். 

பழங்களை அப்படியே சாப்பிடுவதை விட ஜூஸ் செய்தோ, ஸ்மூத்தி போல் தயாரித்து குடிக்க பலரும் விரும்புவார்கள். குழந்தைகளும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். இதன்மூலம் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு தேவையான சத்துக்களும் கிடைக்கும். உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியும் முழுமையாக கிடைக்கும். மாம்பழம் மற்றும் ஓட்ஸ் வைத்து சுவையான ஸ்மூத்தியை எப்படி தயார் செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
2 மாம்பழம்
15 கிராம் ஓட்ஸ்
110 மில்லி பால்
30 கிராம் சர்க்கரை அல்லது தேன்
160 மில்லி தயிர்
5 பாதாம்

செய்முறை:

மாம்பழத்தை தோல் உரித்து சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதனையடுத்து ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைக்கவும். அதனுடன் ஓட்ஸ் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். அதன்பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதில் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். இதனை சிறிது நேரம் அப்படியே குளிர வைக்கவும்.

இதன்பிறகு பாதாம், மாம்பழம், தயார் செய்து வைத்த ஓட்ஸ், தயிர் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இதனை குளிர்சாதனப் பெட்டியில் ஒரு மணி நேரம் வைத்து, பிறகு குளுகுளு ஸ்மூத்தியை ருசித்து மகிழுங்கள்.

Sharing is caring!