மிளகு – பூண்டு ரசம்

மிளகு – பூண்டு ரசம்

தேவையானவை:

புளி – பெரிய நெல்லிக்காய் அளவு,
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்,
பூண்டு – 4 பல்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
சாம்பார் பொடி – கால் டேபிள்ஸ்பூன்,
துவரம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய் – 2 டீஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

புளியைக் கரைத்து வடிகட்டவும். மிளகுத்தூள், பூண்டு, சீரகம், துவரம்பருப்பை லேசாக வறுத்து, கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.

அரைத்த விழுதை புளித் தண்ணீ ரில் கலந்து உப்பு, சாம்பார் பொடி போட்டுக் கொதிக்க வைக்கவும். நெய்யில் கடுகு தாளித்துக் கொட்டி இறக்கவும்.

குறிப்பு:

சூடான சாதத்துடன் இந்த ரசத்தைச் சேர்த்து நெய் விட்டு சாப்பிட… மிகவும் ருசியாக இருக்கும்.

Sharing is caring!