மிளகு ரசம்

4 – 5 பேருக்கு போதுமானது 

தேவையான பொருட்கள் :

  1. மிளகு – 1 தே.க ( நிரப்பி )
  2. மல்லி – 2 மே . க ( நிரப்பி )
  3. நற்சீரகம் – 1 தே.க ( நிரப்பி )
  4. செத்தல் மிளகாய் – ஒன்று
  5. உள்ளி – 8 பல்லு
  6. பழப்புளி – ஒரு பாக்களவு ( விதை நீக்கியது)
  7. பெருங்காயம் – ஒரு குண்டு மணியளவு
  8. உப்பு – அளவுக்கு
  9. தண்ணீர் – 4 தம்ளர்
  10. தேங்காய் பூ – 3 மே. க ( நிரப்பி )
செய்முறை :
  • தேங்காய் பூவில் ஒரு தம்ளர் தண்ணீர் விட்டு பால் பிழிந்து கொள்க
  • ஒரு தம்ளர் தண்ணீரில் பழப் புலியை கரைத்து வைத்துக் கொள்ளவும்
  • மல்லி , சீரகம் , மிளகாய் , உள்ளி என்பவற்றை உரலில் இட்டு நன்றாக இடித்தேடுத்துக் கொள்க .
  • பின்பு இடித்த கலவையை பாத்திரத்திலிட்டு , தேங்காய் பால் பழ புலி கரைசல் 2 தம்ளர் தண்ணீர் என்பவற்றை விட்டு கரைத்து அளவிற்கு உப்பும் சேர்த்துக் கொதிக்க வைக்கவும் . ரசம் பொங்கி கொதித்ததும் அப்பாத்திரத்தின் மூடியில் பெருங் காயத்தை உரைத்து அம மூடியால் பாத்திரத்தை நன்றாக மூடி சிறிது நேரம் வைத்து பின்பு இறக்கி கரண்டியால் நன்றாக கலக்கிகொண்ட பின்பு வடித்தெடுத்து பரிமாறலாம் .

Sharing is caring!