முக்கூட்டு கூழ் செய்முறை

4 – 5 பேருக்கு போதுமானது 

தேவையான பொருட்கள் :

 1. குரக்கன் – 250 கிராம்
 2. பொட்டுக் கடலை – 250 கிராம்
 3. கச்சான் முத்து – 250 கிராம்
 4. ஏலப்பொடி – 1 தே . க .( மட்டமாக )
 5. சீனி – 6 மே. கரண்டி ( நிரப்பி )
 6. உப்பு – அளவிற்கு
 7. தண்ணீர்/ தேங்காய் பால்  – 5 தம்ளர்
செய்முறை :
 • குரக்கன் கடலை என்பவற்றை தனித் தனியாக துப்பரவாக்கி கழுவி காய வைத்துக் கொள்க .
 • கச்சான் முத்து கடலை என்பவற்றை தனித்தனியாக பொன்னிறமாக வறுத்தெடுத்து குரக்கனோடு சேர்த்து திரிதேடுத்துக் கொள்க .
 • திரிதேடுத்த மாவில் ஒரு தம்ளர் மாவை எடுத்து தாய்ச்சியில் போட்டு 6 மேசை கரண்டி சீனி இட்டு கலந்து 5 தம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சுக .
 • கலவை தடிக்கத் தொடங்கியதும் உப்பு ஏலப்பொடி என்பன சேர்த்து கல்லாகி இறக்கி ஆரிய பின் பரிமாறலாம் .

Sharing is caring!