முப்பருப்பு பாயசம் செய்வது எப்படி ?

ஆரோக்கியமாக உணவுகளில் சுவையாக செய்யபடுவதுதான் மும்பருப்பு பாயசம். அதை எப்படி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்

தேவையான பொருட்கள்

  • பாசிப்பருப்பு – 100 கிராம்
  • கடலைப்பருப்பு – 50 கிராம்
  • துவரம்பருப்பு – 50 கிராம்
  • வெல்லம் – 200 கிராம்
  • தேங்காய்த் துருவல் – 4 டேபிள்ஸ்பூன்
  • ஏலக்காய் – 3
  • முந்திரி, திராட்சை – தேவையான அளவு
  • நெய் – 2 டீஸ்பூன்
  • பச்சரிசி – ஒரு டேபிள்ஸ்பூன்.

பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து ஏலக்காய் சேர்த்து நைஸாக அரைத்து, தேங்காய்த் துருவலை இறுதியாகச் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து வைக்கவும்.

பருப்பு வகைகளை அரை மணி நேரம் ஊறவைத்து வேக வைத்துக்கொள்ளவும்.

வெல்லத்தை தண்ணீரில் கொதிக்கவைத்து பாகுகாய்ச்சி கொள்ளவும்.

பிறகு வேகவைத்த பருப்புக் கலவையை அடுப்பில் ஏற்றி தேங்காய் – அரிசிக் கலவை மற்றும் வெல்லக் கரைசல் சேர்த்து நன்கு கரண்டியால் கலக்கி ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.

விருப்பப்பட்டால் சிறிதளவு பால் அல்லது தேங்காய் பால் சேர்க்கலாம்.

சூப்பரான முப்பருப்புப் பாயாசம் ரெடி.

Sharing is caring!