முருங்கைக்காய் கீர்

தேவையானவை: முருங்கைக்காய் – 4, சர்க்கரை – கால் கப், பால் – 500 மில்லி, மில்க்மெய்ட் – 4 டீஸ்பூன், குங்குமப்பூ – 5, 6 இழைகள்

செய்முறை: முருங்கைக்காயை வேக வைத்து உள்ளிருக்கும் சதைப்பற்றை நார் இல்லாமல் எடுக்கவும். பாலை நன்றாகக் காய்ச்சி… சர்க்கரை, முருங்கைக்காய் விழுது, மில்க்மெய்ட் சேர்த்துக் கலந்து கொதிக்கவிட்டு இறக்கவும். குங்குமப்பூ  சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: இது, சுவையுடன் சத்தும் மிக்கது. ரோஸ் எசென்ஸ் விட்டு கலந்து பருகினால், ரோஸ் மில்க் போல இருக்கும்.

 

Sharing is caring!