முள் இல்லாத மீன் வகைககளை பார்த்த உடனேயே அடையாளம் காண்பது எப்படி?

மீன்களுக்கு இணையான ஆரோக்கியமான உணவு அசைவத்தில் இல்லை என்றே கூறவேண்டும். சிக்கன் மட்டன் எடுத்துக்கொண்டால் கொழுப்பு, இதய நோய் வந்துவிடும். ஆனால் மீன் எந்தவகையாக இருந்தாலும், மனித உடலுக்கு தீங்கானது அல்ல. இப்படி சத்துமிகுந்த மீன் இனத்தை பார்த்த உடனே என்னவகை இது? மத்தியா கெளுத்தியா? என அடையாளம் காண சில புகைப்படங்கள்.

வஞ்சிர மீன் – ஒரு படத்தில் சந்தானம் சொல்வார், ‘வஞ்சர மீனா? இதை சாப்பிட ஆசைப்பட்டால், பேங்கில் லோன் வாங்கி தான் சாப்பிடணும்’ அந்த அளவிற்கு காஸ்லி! ஆனால் இதன் சுவை முன் காசெல்லாம் பெரிய விஷயம் இல்லை.

வெளவால் எனும் பொம்பிரேட் – சுவையான, முள் குறைவான மீன். கேரளா பக்கம் வெகுபிரபலம். வாழை இலையில் சுட்டு கொடுப்பார்கள் சுவை அருமையாக இருக்கும்!

பாறை மீன் – இதனை பட்ஜெட் மீன் என்று கூட சொல்லலாம். மேற்கண்ட மீன்களை விட குறைவான விலை மதிப்பே. ஆனால் சுவையில் மேற்கண்டவைகளுக்கு ஈடுகொடுக்கும்.

மத்தி மீன் – ஏழைகளின் மீன். மனித நரம்பு மண்டலத்திற்கு மிகவும் நல்லது.

கானாங்கெளுத்தி – இந்த மீனை அடிக்கடி உண்டு வந்தால் மன அழுத்தத்திற்குள் சிக்காமல் வாழ முடியும்.

நெத்திலி மீன் – சளிக்கு உகந்தது என்பார்கள். சுண்ணாம்பு சத்து மிகுந்த மீன். எண்ணெயில் பொறித்த மீன் என்றால் சுவை அலாதி. இதன் உண்மை பெயர் நெய்த்தோல். இதுவே நாளடைவில் நெத்திலி என மாறியது.

சூரை மீன் – பார்க்க வஞ்சரத்தை ஒத்திருக்கும். இதனது செவுளை கொண்டே சூரை மீனை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். புரதசத்து மிகுந்த மீன்.

சுறா – கொழுப்பு இல்லாத மீன் வகை. கிட்டத்தட்ட 75 வகை சுறா உண்டு. இதனை மீன் கடையில் வாங்கும் போது, பெண் சுறா மீனா என கேட்டு வாங்குங்கள்.

கிழங்கான் மீன் – அடிக்கடி உண்டுவந்தால் மூல வியாதியை கூட குணப்படுத்தும். உடலுக்கு மிகுந்த குளிர்ச்சி நிறைந்தது.

விலாங்கு மீன் – உஷாரான மீன். சேற்றில் கூட உயிர்வாழும். பாம்பு போலவே இருக்கும். தோலை உறித்துவிட்டு உண்ண வேண்டும். மற்ற மீன்களை போல் அல்லாமல் இதனது தோலை உறிக்க, மீனை மண்ணில் போட்டு பிரட்டி எடுக்க வேண்டும்.

விரால் மீன்- இதனை பிடிப்பதே மிகவும் கடினம். ஏனெனில் சேற்றுக்கு அடியில் ஒழிந்துகொள்ளும். உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

காலா மீன் – கறி போன்றுதான் இருக்கும் முள்ளே இருக்காது. குழந்தைகளுக்கு கொடுக்க உகந்தமீன்.

ஜிலேபி – வறுவலுக்கு அருமையான மீன். புரதசத்து மிகுந்தது. குளத்து மீன், ஆற்று மீன், கடல் மீன் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி ஆரோக்கியமும் கூட. ஒட்டுமொத்த மீன் இனத்தை ருசி பார்க்க இந்த பிறவி போதாது.

Sharing is caring!