ரவை உப்புமா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:
1 கப் ரவை
2 கப் பசுவின் பால் – தண்ணீர் அல்லது தேங்காய்ப் பாலும் பாவிக்கலாம்.
3 மேசைக் கரண்டி நெய்- அல்லது பட்டர் அல்லது தேங்காய் எண்ணை
3 பச்சைமிளகாய்
வெங்காயம் தேவையான அளவு
கருவேப்பிலை சிறிது
2 காய்ந்த செத்தல் மிளகாய்
1 1/2 மேகரண்டி கடுகு
1 1/2 தேகரண்டி உழுந்து
1 தேகரண்டி சீனி
தேவையான அளவு உப்பு – அண்ணளவாக 1 தேக்கரண்டி

செய்முறை: 
முதலில் ரவையை ஒரு சட்டியில் இட்டு அடுப்பில் வைத்து கைவிடாமல் வறுக்கவும். ரவை சிறிது வெளிர் நிறமாக மாறும் வரை கருகிவிடாமல் வறுத்து எடுத்து ஆறவிடவும். பின்பு ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் 3 மேசைக்கரண்டி நெய்விட்டு சூடாக்கி அதனுள் வெட்டிய வெங்காயம். பச்சைமிளகாய் என்பவற்றைப் போட்டு வதக்கவும். வெங்காயம் ஓரளவிற்கு வதங்கியவுடன் அதனுள் கடுகு, உழுந்து, பாதியாக வெட்டிய செத்தல், கருவேப்பிலை இவற்றைப் போட்டு கிளறவும். பின்பு அதனுள் பசும்பால், உப்பு, சிறிது சீனி போட்டு கொதிக்கவிடவும். பால் ஒருதரம் பொங்கி கொதித்தவுடன் அடுப்பின் சூட்டை நிறுத்தவும் அல்லது நன்றாக குறைத்த பின்பு வறுத்து ஆறவிட்ட ரவையை பாலினுள் கொட்டி கட்டிபடாமல் கிளறி இறக்கவும். ரவை நன்றாக பாலில் கலந்தவுடன் ரவையுள்ள சட்டியை சூடான அடுப்பில் இருந்து உடனடியாக இறக்கி வைக்கவும். இல்லையேல் அடுப்பின் சூட்டில் ரவை இறுகி வறண்டுவிடும்.

Sharing is caring!