ராகி முருங்கைக்கீரை தோசை செய்வது எப்படி?

ராகி சிறு தானியங்களில் முதன்மை பெற்றிருக்கிற ஒன்று தான் .

உடலின் வலிமை மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் அதிக அளவில் புரதச்சத்துக்களும் கனிமச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.

அந்தவகையில் இவ்வளவு சத்து நிறைந்த ராகியின் முருங்கைக் கீரை சேர்த்த தோசையை செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல பயனை தருகின்றது.

தற்போது இந்த ராகி முருங்கைக்கீரை தோசை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • கேழ்வரகு – 1/4 கிலோ
  • முருங்கைக் கீரை – கைப்பிடியளவு
  • வெங்காயம் – 2
  • பச்சரிசி – கால் கப்
  • உளுத்தம்பருப்பு – கைப்பிடியளவு
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை

முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். புதிதாகவும் இளம் கீரையாக இருந்தால் ருசி கூடும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கேழ்வரகு, பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஒவ்வொன்றையும் தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். (கேழ்வரகு மாவை கூட பயன்படுத்திக் கொள்ளலாம்)

பிறகு அதனை தனித்தனியாக நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

அரைத்த மாவை ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கரைத்து ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.

புளித்த மாவில் முருங்கைக்கீரை, வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

சூப்பரான சத்தான ராகி முருங்கைக்கீரை தோசை தயார்.

Sharing is caring!