ரோல் சப்பாத்தி

ரோல் சப்பாத்தி

தேவையானவை:

கோதுமை மாவு – கால் கிலோ,
கேரட், முள்ளங்கி, முட்டைகோஸ் துருவல் – தலா ஒரு கப்,
இஞ்சி பேஸ்ட் – அரை டீஸ்பூன்,
புதினா – ஒரு கைப்பிடி அளவு,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
தண்ணீர், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, அதில் துருவிய முள்ளங்கி, முட்டைகோஸ், கேரட், இஞ்சி பேஸ்ட், நறுக்கிய புதினாவைப் போட்டு, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

கோதுமை மாவை சப்பாதிகளாக இட்டு தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் வேக விட்டு, வதக்கிய காய்களை அதன் மீது பரவலாக வைத்து ரோல் செய்து கொடுக்கவும்.

குறிப்பு:

குழந்தைகள் வெளியில் செல்லும்போது அவர்களுக்கு இப்படிச் செய்து கொடுத்தால், கையில் வைத்தபடியே சாப்பிடுவதற்கு வசதியாக இருக்கும்.

Sharing is caring!