மறந்த உணவுகள்… மறக்காத சுவை!

தேவை:

காய்ந்த மிளகாய் – 6

புளி – நெல்லிக்காய் அளவு

பெருங்காயத்தூள் – சிறிதளவு

கறிவேப்பிலை – ஒரு கப்

கடுகு – கால் டீஸ்பூன்

நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.

வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, சட்னியுடன் சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு:

பயணங்களின்போது இட்லி, தோசை, தயிர் சாதத்துக்குத் தொட்டுக் கொள்ள எடுத்துச்செல்வதால் `வண்டிகாரச் சட்னி’ என்ற பெயர் பெற்றது.

Sharing is caring!