வாழைக்காய் பொடிமாஸ்

தேவையானவை: முற்றிய வாழைக்காய் – ஒன்று (வேக வைக்கவும்), இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 2, மிளகாய் வற்றல் – ஒன்று, கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,  பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வேக வைத்த வாழைக்காயை தோல் நீக்கி, கேரட் சீவும் சீவியில் துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கிள்ளிய மிளகாய் வற்றல், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் ஆகியற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுக்கவும். நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், நறுக்கிய கறிவேப்பிலை  சேர்த்துக் கிளறவும். துருவிய வாழைக்காய், உப்பு இரண்டையும் சேர்த்து. கரண்டி காம்பினால் கலக்கி, நன்கு கலந்ததும் இறக்கி னால்… வாழைக்காய் பொடிமாஸ் தயார்!

Sharing is caring!