வாழைத்தண்டு பச்சடி

தேவையானவை:

 • 1. வாழைத்தண்டு (நாரெடுத்து பொடியாக நறுக்கியது) – 1 கப்
 • 2. தயிர் – 2 கப்
 • 3. உப்பு
 • 4. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
 • 5. வெங்காயம் – 1/2 (பொடியாக நறுக்கியது)
 • 6. தக்காளி – 4 துண்டு
 • 7. பச்சை மிளகாய் – 2
 • 8. கருவேப்பிலை
 • 9. எண்ணெய், கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு – தாளிக்க
 செய்முறை:
 • வாழைத்தண்டில் உப்பு, தயிர், மஞ்சள் தூள் கலந்து ஊற வைக்கவும். (1/2 மணி நேரம் போதும்.)
 • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலைபருப்பு போட்டு தாளிக்கவும்.
 • இதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். (லேசா வதக்கினா போதும், ரொம்ப சிவக்க வதக்க வேண்டாம். விரும்பினால் இஞ்சி சிறிது தட்டி வெங்காயத்துடன் வதக்கவும்.)
 • பின் தக்காளி, கருவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, ஊற வைத்த வாழைத்தண்டில் சேர்த்து நன்றாக கலக்கவும். (கலந்த பின் அடுப்பில் வைக்க வேண்டியதில்லை)
இது சூடானா சாதத்தில் கலந்து சாப்பிட ருசியாக இருக்கும்.

Sharing is caring!