வித்தியாசமான சுவையில் பீட்ரூட் சட்னி சமைப்பது எப்படி தெரியுமா?

எப்பொழுதும் ஒரே மாதிரியான சட்னி வகைகளை செய்து சாப்பிட்டால் எப்படி? விதவிதமான சட்னி வகைகளையும், அதாவது உடலுக்கு ஆரோக்கியமான பீட்ரூட் சட்னி போன்றவற்றை சமைத்து ருசித்து சாப்பிட்டு பாருங்க…

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் – 1 கப்

தேங்காய் – 1/2 கப்

எண்ணெய் – 1 1/2 tbsp

உளுத்தம் பருப்பு – 1 tspகடலை பருப்பு – 2 tbsp

காய்ந்த மிளகாய் – 3

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

இஞ்சி – 1/2 துண்டு

புளி – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தே.அ

தாளிக்க

எண்ணெய் – 2 tsp

கடுகு – 1 tsp

உளுத்தம் பருப்பு – 1/2 tsp

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

பீட்ரூட்டை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

பின் காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், இஞ்சி சேர்த்து வதக்கவும். தற்போது பீட்ரூட் சேர்த்து வதக்கவும். புளியும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைத்து சூடு ஆற விடுங்கள்.

ஆறியதும் ஜாரில் போட்டு உப்பு சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

இறுதியாக அதை ஒரு கிண்ணத்தில் வழித்துக்கொண்டு பின் தாளித்து கொட்டுங்கள். அவ்வளவுதான் பீட்ரூட் சட்னி தயார்.

Sharing is caring!