வீட்டுல கடலை பருப்பு இருக்கா?

நம்மில் பல பேருக்கு மிகவும் பிடித்த நொறுக்குத் தீனியில் பக்கோடா.

அந்த பகோடாவை மொறுமொறுப்பாக யாழ்ப்பாண முறையில் சுவையாக எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • கடலை பருப்பு – 250 கிராம்
  • உள்ளிப்பல் – 12
  • கருவேப்பிலை – சிறிதளவு
  • மிளகாய் துகள்கள் – 1 1/2 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • பெருஜீரகம் – 1/2 தேக்கரண்டி
  • ஓமம் – 1/2 தேக்கரண்டி
  • எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை

  • கடலை பருப்பை 8 மணிநேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  • மிளகாயை வெறும் கடாயில் வறுத்து துகள்களாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  • உள்ளிப்பல்லையும் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும், ஓமத்தை இடித்து எடுத்துக் கொள்ளவும்.
  • அரைத்த கடலை பருப்புடன் அரைத்த உள்ளிப்பல்,கருவேப்பிலை,மிளகாய் துகள்கள்,பெருஜீரகம் மற்றும் ஓமம் சேர்த்து மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  • பின் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மாவை சிறிய துண்டுகளாக மிதமான தீயில் பொரித்து எடுத்தால் மொறுமொறுப்பான யாழ்ப்பாண பகோடா தயார்.

Sharing is caring!