வீட் ரவா பைனாப்பிள் அல்வா

தேவையானவை: கோதுமை ரவை – ஒரு கப், பைனாப்பிள் விழுது, சர்க்கரை – தலா ஒன்றரை கப், வறுத்த முந்திரி துண்டுகள் – 15, குங்குமப்பூ – 4 அல்லது 5 இதழ்கள், நெய் – 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கடாயில் நெய் விட்டு, சூடானதும் கோதுமை ரவையை சேர்த்து சூடுபட கிளறவும். பிறகு, ரவை மூழ்கும் அளவுக்கு சுடு நீர் விட்டு கிளறவும். கெட்டியாகி வந்ததும் சர்க்கரை, பைனாப்பிள் விழுது, சேர்த்துக் கிளறவும். பிறகு, குங்குமப்பூ சேர்க்கவும். இறுகி கெட்டியாக வந்ததும் முந்திரி துண்டுகள் போட்டு நன்கு கிளறி இறக்கவும். இந்தக் கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.

குறிப்பு: கிளறும் கரண்டியில் எடுத்தால் தானாக ‘தொப்’பென்று விழ வேண்டும். இதுதான் சரியான அல்வா பதம்.

Sharing is caring!