வெஜிடபிள் இடியாப்பம்

வெஜிடபிள் இடியாப்பம்

தேவையானவை:

இடியாப்பம் – 5, பெரிய வெங்காயம்,
கேரட், குடமிளகாய் – தலா ஒன்று,
பீன்ஸ் – 10, நெய் – 2 டீஸ்பூன்,
கொத்தமல்லி (நறுக்கியது) – கைப்பிடி அளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

பெரிய வெங்காயம், பீன்ஸ், கேரட், குடமிளகாயை நறுக்கிக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு, நறுக்கிய காய்களைப் போட்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.

இடியாப்பத்தை கொஞ்சம் வெந்நீரில் சேர்த்து, வடிகட்டி அதனுடன் வதக்கிய காய்களைப் போட்டுக் கிளறவும். நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கி குழந்தைகளுக்குக் கொடுக்கவும்.

குறிப்பு:

இட்லி அரிசியை ஊற வைத்து அரைத்து மாவை மிதமான தீயில் வைத்துக் கெட்டியாகக் கிளறினால் இடியாப்ப மாவு ரெடி. இதை அச்சில் போட்டுப் பிழிந்து, ஆவியில் வேக வைத்தால் இடியாப்பம் தயார். இதனுடன் தேங்காய்ப் பால், வெல்லம் சேர்த்து இனிப்பு இடியாப்பமாகவும் கொடுக்கலாம்.

Sharing is caring!