வெஜிடபிள் பருப்பு ரைஸ்

வெஜிடபிள் பருப்பு ரைஸ்

தேவையானவை:

அரிசி – கால் கிலோ,
துவரம்பருப்பு – 100 கிராம்,
கீரை இலை – ஒரு கைப்பிடி,
முள்ளங்கி, கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் – தலா 50 கிராம், நெ
ய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, பருப்பு இரண்டையும் சேர்த்து குக்கரில் குழைவாக வேக வைக்கவும். கீரை, முள்ளங்கி, கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸில் உப்பு சேர்த்து வேக வைக்கவும். வேக வைத்த சாதம், பருப்புடன் காய்களை சேர்த்து நன்றாக மசித்து, நெய் விட்டு கொடுக்கவும்.

குறிப்பு:

சிறுவயது முதல் எல்லா காய்களையும் கொடுத்துப் பழக்கினால் ‘காய் எனக்குப் பிடிக்காது’ என்று சொல்லி அடம் பிடிக்காமல் சாப்பிடுவார்கள். காய்கள், பருப்பு ஆகியவை குழந்தைகளுக்கு பசியைத் தாங்கச் செய்யும். உடல் வளர்ச்சிக்கும் நல்லது

Sharing is caring!