வெண்டைகாய் மோர்குழம்பு செய்வது எப்படி?

கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்தை குறைத்து அருமையான வெண்டைக்காய் மோர்குழம்பு செய்வது எப்படி என்பதை பற்றி இங்கு பார்ப்போம்..

தேவையான பொருட்கள்;

வெண்டைக்காய் – 13

ஓரளவு புளிப்பு உள்ள மோர் – 500 மில்லி.

காய்ந்த மிளகாய் – 2

தேங்காய்த் துருவல் – ஒரு சிறிய கப்

மிளகு, தனியா, கடலைப்பருப்பு, கடுகு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வெண்டைக்காயை நீள துண்டுகளாக நறுக்கி, எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், மிளகு, தனியா, கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுக்கவும்.

இதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்து, மோருடன் கலந்து தேவையான உப்பு சேர்க்கவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து, மோர் கலவையை ஊற்றி, வதக்கிய வெண்டைக்காயும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும். சூப்பரான வெண்டைக்காய் மோர்க்குழம்பு ரெடி.

Sharing is caring!