வெந்தய மாங்காய்

தேவையானவை: மாங்காய் – ஒன்று, வெந்தயம் – ஒரு டீஸ்பூன், மஞ்சள் –  ஒரு துண்டு, மிளகாய் வற்றல் – 4, பெருங்காயம் – சிறு துண்டு, கடுகு –  ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மாங்காயைப் பொடியான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், வெந்தயம், மஞ்சள், பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து பொடி செய்யவும். மாங்காயில் உப்பு, வறுத்துப் பொடித்த பொடி சேர்த்துக் கலக்கவும். மீதமுள்ள ஒரு டீஸ்பூன் எண்ணெயை கடாயில் விட்டு, சூடானதும் கடுகு தாளித்து, மாங்காய் கலவையில் சேர்த்து, கிள்ளிய கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். 5 நிமிடம் ஊறிய பின் பரிமாறலாம்.

குறிப்பு: இதன் சுவையும், மணமும் அபாரமாக இருக்கும். தயிர் சாதத்துக்கு தொட்டு சாப்பிட… நிறைவான திருப்தி கிடைக்கும்.

Sharing is caring!