வெரைட்டி வெஜிடபிள் கூட்டு

வெரைட்டி வெஜிடபிள் கூட்டு

தேவையானவை:

கேரட், குடமிளகாய், சௌசௌ, உருளைக்கிழங்கு – தலா ஒன்று,
பீன்ஸ் 10,
துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் – தலா ஒரு கப்,
பச்சை மிளகாய் – ஒன்று,
மிளகு 10 , தனியா, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கேரட், பீன்ஸ், குடமிளகாய், சௌசௌ, உருளைக்கிழங்கை நறுக்கிக் கொள்ளவும். எல்லா காய்களையும் உப்பு சேர்த்து வேக விடவும்.

கடாயில் எண்ணெய் விட்டு தேங்காய்த் துருவல், மிளகு, சீரகம், தனியா, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் வறுத்து, அரைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பு, பாசிப்பப்ருபை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். பருப்பையும், அரைத்த விழுதையும் காயுடன் சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.

குறிப்பு:

சூடான சாதத்தில் நெய் விட்டு, இந்தக் கூட்டை போட்டு பிசைந்து சாப்பிட்டால், தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.

Sharing is caring!